டாக்டர் சாந்தாவின் மறைவு குறித்து சூர்யாவின் டுவீட்!

  • IndiaGlitz, [Wednesday,January 20 2021]

சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவராக இருந்த டாக்டர் சார்ந்த அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் சாந்தாவின் மறைவு குறித்து பிரதமர் மோடி உள்பட பல முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் என்பதும், திரை உலகில் உள்ள பல நட்சத்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது தெரிந்ததே. நேற்று டாக்டர் சாந்தாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா டாக்டர் சாந்தாவின் மறைவு குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன; மனிதர் கடவுளாக முடியும் என்பதை மருத்துவர் அம்மா வி. சாந்தா அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்; அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அதற்கு காலத்தின் சாட்சி; மனம் உருகும் அஞ்சலி! என்று கூறியுள்ளார்.

More News

காணமல் போன ஜா மா பொது வெளிக்கு வந்தார்? என்ன நடந்தது அவருக்கு?

கடந்த அக்டோபர் மாத இறுதியில் தான் கலந்து கொள்ள வேண்டிய பிரபல டிவி நிகழ்ச்சி உரையாடலில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார்

2 கோடி வசூல்ன்னா 20 கோடின்னு சொல்வாங்க: 'மாஸ்டர்' பட வசூலை கலாய்த்தாரா அமைச்சர்?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்து விட்டதாகவும் உலகம் முழுவதும் 200 கோடி வசூலை நெருங்கி

சிவகார்த்திகேயன் உதவியால் நனவான கனவு: மருத்துவ மாணவி நெகிழ்ச்சி!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பூக்கொல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்த சஹானா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் குடும்ப வறுமையால் டாக்டருக்கு படிக்க வேண்டும்

கமலுக்கு மெசேஜ் அனுப்பிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி!

105 நாட்களாக நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஆரி மக்களால் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அவருக்கு சம்பளம் மற்றும் பரிசு தொகை சேர்த்து கிட்டத்தட்ட

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: விடுதலையாக ஒருவாரம் இருக்கும் நிலையில் பரபரப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்தார்