ஒரே நாளில் சூர்யா பதிவு செய்த 3 டுவிட்டுக்கள்: 3வது டுவிட்டில் கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா கடந்த 5 ஆண்டுகளாக டுவிட்டரில் இருந்தாலும் எப்பொழுதாவது தான் டுவிட்டுக்களை பதிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று ஒரே நாளில் அவர் மூன்று டுவிட்டுக்களை பதிவு செய்துள்ளார்.
முதலாவதாக கேரளாவில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் சூர்யா தனது டுவிட்டரில் கூறியிருந்தார்.
அடுத்ததாக மீராமிதுன் பிரச்சனையில் கருத்துக்களை தெரிவித்து தனது தம்பி தங்கைகள் யாரும் தங்கள் நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது மூன்றாவது டுவிட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
கேரளா இடுக்கி மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது. குடும்பத்திற்காகவும் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும் பிறந்த மண்ணைவிட்டு பிரிந்து சென்று வேலை செய்தவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்து போனது தாங்க முடியாத துயர நிகழ்வு. நெஞ்சை உலுக்கும் இந்த இயற்கை விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கு எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
#MunnarLandSlide ???? pic.twitter.com/8I2gvFdovQ
— Suriya Sivakumar (@Suriya_offl) August 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments