close
Choose your channels

ஜோதிகாவை புகழ்ந்த காமெடி நடிகருக்கு நன்றி கூறிய சூர்யா

Saturday, March 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகியிருந்த நிலையில் '36 வயதினிலே' படத்தின் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அந்த படத்தின் வெற்றி காரணமாக தனது வயதுக்கேற்ற அதே நேரத்தில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான 'நாச்சியார்' திரைப்படம் ஜோதிகாவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இந்த படத்தை அடுத்து அவர் மணிரத்னம் இயக்கும் படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து மீண்டும் பிசியாகியுள்ளார்.

இந்த நிலையில் காமெடி நடிகர் விவேக், ஜோதிகாவை பாராட்டி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:  நடிகை ஜோதிகாவை பார்த்திபன் மகள் திருமணத்தில் பார்த்தேன். பார்ப்பதற்கே இனிமையாக  இருந்தார். அவரது புன்னகையில் ஒரு நம்பிக்கை இருந்தது. அவர் ஒரு மனைவியாக, ஒரு அம்மாவாக, ஒரு நிர்வாகியாக, ஒரு கும்பத்தலைவியாக, மீண்டும் ஒரு நடிகையாக சாதித்துள்ளார். பல பெண்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாக உள்ளார்' என்று கூறியிருந்தார்

ஜோதிகாவை புகழ்ந்து பதிவு செய்திருந்த நடிகர் விவேக்கிற்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment