தமிழக அரசுக்கு சூர்யாவின் நெஞ்சார்ந்த பாராட்டு: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Thursday,September 17 2020]
நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு குறித்து வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. சூர்யாவின் நீட் தேர்வு குறித்த அறிக்கையை பல அரசியல்வாதிகள் பாராட்டியும் ஒரு சில அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒருசிலர் சூர்யாவின் அறிக்கை உள் நோக்கம் இல்லாதது என்றும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்றும் அவர் மக்களின் மனதில் உள்ளதைப் பிரதிபலித்துள்ளார் என்றும் தெரிவித்தனர்
இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு துணை நிற்போம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்
நேற்று தமிழக சட்டசபையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
— Suriya Sivakumar (@Suriya_offl) September 16, 2020
மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்...