தமிழக அரசுக்கு சூர்யாவின் நெஞ்சார்ந்த பாராட்டு: பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Thursday,September 17 2020]

நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு குறித்து வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. சூர்யாவின் நீட் தேர்வு குறித்த அறிக்கையை பல அரசியல்வாதிகள் பாராட்டியும் ஒரு சில அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒருசிலர் சூர்யாவின் அறிக்கை உள் நோக்கம் இல்லாதது என்றும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்றும் அவர் மக்களின் மனதில் உள்ளதைப் பிரதிபலித்துள்ளார் என்றும் தெரிவித்தனர்

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு துணை நிற்போம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்

நேற்று தமிழக சட்டசபையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

More News

விஜய் பட இயக்குனர் உடல்நலக்குறைவால் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

தளபதி விஜய் நடித்த சூப்பர்ஹிட் படமான 'வேட்டைக்காரன்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் திடீரென உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

ராகவா லாரன்ஸ், விஷாலை அடுத்து தீபாவளி ரிலீஸில் இணையும் சிவகார்த்திகேயன்?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன

சிகரம்‌ தொட்ட சாதனையாளர், சாதிக்கத்‌ துடிக்கும்‌ இளமை‌யின் 'எவனென்று நினைத்தாய்': ராஜ்கமல் நிறுவனம் அறிக்கை!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'எவனென்று நினைத்தாய்' குறித்த படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியானது என்பதை பார்த்தோம்.

லோகேஷ் கனகராஜ்-கமல்ஹாசன் படத்தின் டைட்டிலுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு:

மாநகரம், கைதி ஆகிய படங்களை அடுத்து தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' என்ற திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

திருமணத்தை மறுத்து வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்… 7 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை!!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் திருமணத்தை மறுத்து வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், 7 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று மீண்டும்