close
Choose your channels

எங்கள் நோக்கம் முழுமை அடைந்தது.. தமிழக முதல்வருக்கு நன்றி சொன்ன சூர்யா..!

Friday, November 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எங்கள் படைப்பின் நோக்கம் முழுமை அடைந்தது என்றும் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி என்றும் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ என்ற திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ’ஜெய்பீம்’ வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதாவது:

’ஜெய்பீம்’ திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

’ஜெய்பீம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் தான் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 170’ படத்தை இயக்கி வருகிறார் என்பதும் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment