சிம்புவுக்கு நன்றி கூறிய சூர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் இன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. ஜோதிகாவின் நடிப்பு, ராதாமோகனின் கதை சொல்லும் பாணி, குறிப்பாக சிம்பு மற்றும் யோகிபாபுவின் சிறப்பு தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா, 'காற்றின் மொழி' படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். கதைகளின் மீது ஜோதிகா வைத்திருக்கும் நம்பிக்கையை பாராட்டிய சூர்யா, இயக்குனர் ராதாமோகன், தயாரிப்பாலர் தனஞ்செயன் ஆகியோர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்தார்.
அதேபோல் சிம்பு மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோர்களுக்கு நன்றி கூறிய சூர்யா, மயில்சாமி தோன்றும் காட்சிகளில் தன்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றும், இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Thank you #Simbu & @LakshmiManchu for making it even more special and Mylsamy sir I rolled down laughing.. Sure our audience and the raving reviews will give #KaatriMozli it’s deserving success #JoCareerBest pic.twitter.com/LAamSLORZk
— Suriya Sivakumar (@Suriya_offl) November 16, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments