சிம்புவுக்கு நன்றி கூறிய சூர்யா

  • IndiaGlitz, [Friday,November 16 2018]

ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் இன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. ஜோதிகாவின் நடிப்பு, ராதாமோகனின் கதை சொல்லும் பாணி, குறிப்பாக சிம்பு மற்றும் யோகிபாபுவின் சிறப்பு தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா, 'காற்றின் மொழி' படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். கதைகளின் மீது ஜோதிகா வைத்திருக்கும் நம்பிக்கையை பாராட்டிய சூர்யா, இயக்குனர் ராதாமோகன், தயாரிப்பாலர் தனஞ்செயன் ஆகியோர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்தார்.

அதேபோல் சிம்பு மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோர்களுக்கு நன்றி கூறிய சூர்யா, மயில்சாமி தோன்றும் காட்சிகளில் தன்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றும், இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

More News

விஷாலின் அடுத்த படத்தில் சன்னிலியோன்?

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'இரும்புத்திரை' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார்

கஜா புயல்: சாய்ந்த மரத்தில் சிக்கி பலியான துப்புரவு பெண் தொழிலாளி

வங்கக்கடலில் உருவான கஜா புயல் தனது கோரத்தாண்டவத்தை காட்டி இன்று காலை கரையை கடந்தது. இந்த புயலால் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாகவும்,

'தளபதி 63' நாயகி நானா? பிரபல நடிகையின் டுவீட்

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்து, இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில்

திருமணமும் ஆகவில்லை, கர்ப்பமும் இல்லை: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த 'நண்பன்' படம் உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையுமான இலியானாவுக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருக்கும்

தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு

கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,