மீராமிதுனுக்கு தகுந்த பதிலடி கொடுத்த சூர்யா!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக சூப்பர் மாடல் அழகி மீராமிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் திரையுலக பிரபலங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா குறித்தும், அவர்களது குடும்பத்தினர் குறித்து அவர் வெளியிட்ட வீடியோவுக்கு மிகப்பெரிய கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் மீராமிதுனுக்கு அறிவுரை கூறும் வகையில் நேற்று இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். திரையுலகினர் நமக்குள் ஒருவரை ஒருவர் கருத்து மோதல் செய்து கொண்டு கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் என்றும் அவர் அறிவுரை கூறியிருந்தார். ஆனால் இந்த அறிவுரைக்கும் மீராமிதுன் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் பாரதிராஜா தனது அறிக்கையில் விஜய் மற்றும் சூர்யாவும் தங்களது ரசிகர்களை கட்டுப்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பாரதிராஜா அறிவுரை கூறியிருந்தார். இந்த அறிவுரையை ஏற்றுக்கொண்ட நடிகர் சூர்யா இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. என்று பதிவு செய்துள்ளார்.
மீராமிதுனுக்கு பதில் கூறி நேரத்தையும் சக்தியையும் வீணாக்க வேண்டாம் என்று சூர்யா தனது ரசிகர்களுக்கு கூறியிருப்பது மீராமிதுனுக்கு தகுந்த பதிலடியாக கருதப்படுகிறது.
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. https://t.co/qR32iviTfO
— Suriya Sivakumar (@Suriya_offl) August 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments