இதற்கு முன் இப்படி நான் பார்த்ததே இல்லை: சூர்யாவின் நெகிழ்ச்சியான டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசானில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி தங்களது சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பாமக உள்ளிட்ட ஒரு சில அரசியல் அமைப்புகள் மட்டும் இந்த படத்தில் உள்ள ஒரு சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் மறைமுகமாகவும் நேரடியாகவும் சூர்யாவுக்கும் படக்குழுவினர்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சட்டபூர்வமான நடவடிக்கையை காவல் துறை எடுத்து வருகிறது என்பதும் நாம் அறிந்ததே
இந்த நிலையில் சூர்யாவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்று சேர்ந்ததும் என்பதும் பாரதிராஜா, வெற்றிமாறன், ராஜீவ்மேனன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்தவர்களை கண்டித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சூர்யா தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். என் மீது அனைவரும் காட்டும் இந்த அன்பு மிகவும் அலாதியானது என்றும், இந்த அன்பை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை என்றும், நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுக்கு என்றும் நன்றி உடையவனாக இருப்பேன் என்றும், நன்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்றும், எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி’ என்றும் தெரிவித்துள்ளார்.
Dear all, this love for #Jaibhim is overwhelming. I’ve never witnessed this before! Can’t express in words how thankful I am for the trust & reassurance you all have given us. Heartfelt thanks for standing by us ✊??
— Suriya Sivakumar (@Suriya_offl) November 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com