அரவிந்த்சாமிக்கு நன்றி சொன்ன சூர்யா.. காரணம் இதுதான்.. புதிய போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அரவிந்த்சாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி ஹீரோ வேடத்தில் நடிக்க அதில் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் அரவிந்த்சாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு சூர்யா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ’மெய்யழகன்’ திரைப்படத்தில் நீங்கள் மிகவும் ஸ்பெஷல் ஆனவர் என்றும் கார்த்தி மற்றும் ’மெய்யழகன்’ பட குழுவினர்களுடன் இணைந்த உங்களது பங்களிப்பு மிகவும் சிறப்பானது என்றும் உங்களுடன் இணைந்து பணிபுரிந்ததில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும் ’மெய்யழகன்’ படத்தின் புதிய போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அதில் அரவிந்த்சாமி ஸ்டைலாக உள்ள காட்சி இடம் பெற்றிருப்பதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Dearest @thearvindswami thank you for making #Meiyazhagan so special! Delighted to see your bond with @Karthi_Offl & team. Wishing you everlasting happiness! #மெய்யழகன் pic.twitter.com/N3DAkFhWam
— Suriya Sivakumar (@Suriya_offl) June 18, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments