'கங்குவா' படத்தின் வெறித்தனமான அப்டேட் கொடுத்த சூர்யா.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் வெறித்தனமான அப்டேட்டை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் கொடுத்துள்ளதை அடுத்து ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்
சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய காட்சியின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ’கங்குவா’ படத்தின் கடைசி ஷாட்டை முடித்துவிட்டேன். இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி. குறிப்பாக இயக்குனர் சிறுத்தை சிவா அவர்களுடன் இணைந்து பணிபுரிந்த நாட்கள் எனக்கு மறக்க முடியாதது. நிச்சயம் இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் திரையில் பார்க்கும்போது திருப்தி அடையும் வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ’கங்குவா’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.
My last shot done for kanguva! An entire unit filled with positivity! It’s a finishing of one and beginning of many..! Thank you dearest @directorsiva and team for all the memories! #Kanguva is huge n special can’t wait for you all to see it on screen! #Family #Missing pic.twitter.com/C7WmX2B2In
— Suriya Sivakumar (@Suriya_offl) January 10, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments