திடீர் விசிட் அடித்த சூர்யா. ஆச்சரியத்தில் சூப்பர் ஸ்டார் படக்குழு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் நடிகர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென நடிகர் சூர்யா சென்றது அந்த படக்குழுவினர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து வரும் திரைப்படத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென நடிகர் சூர்யா சென்றார். இதனால் ஆச்சரியமடைந்த படக்குழுவினர் அவரை வரவேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
’காதல் - தி கோர்’ என்ற படத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற படத்தை இயக்கிய ஜோபேபி இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த பர்ஸ்ட் லுக் வெளியான தினத்தில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கதையை கேட்ட நாளிலிருந்து எனக்கு மிகவும் பிடித்து இருந்ததாகவும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நடிகை ஜோதிகா கடந்த 2009 ஆம் ஆண்டு ’சீதா கல்யாணம்’ என்ற மலையாள படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Suriya | மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் #KaathalTheCore படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் சூர்யா. #Jyotika pic.twitter.com/LwzDmAu3xL
— Senthilraja R (@SenthilraajaR) November 9, 2022
Them??❤️ @Suriya_offl Na & @mammukka Sir | #Kaathal #KaathalTheCore #VaadiVaasal pic.twitter.com/xsFUzu498S
— Suriya Trends Kerala (@TrendsSuriyaKL) November 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments