என் முதல் படத்தில் நீங்கள், உங்களின் கடைசி படத்தில் நான்: கே.வி.ஆனந்த் குறித்து சூர்யா!

  • IndiaGlitz, [Saturday,May 01 2021]

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்த நிலையில் அவருடைய இயகத்தில் அயன், மாற்றான் மற்றும் காப்பான் ஆகிய படங்களில் நடித்த சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கே.வி. ஆனந்த்‌ சார்‌... இது 'பேரிடர்‌ காலம்‌' என்பதை உங்கள்‌ மரணம்‌ அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள்‌ இல்லை என்ற உண்மை, மனமெங்கும்‌ அதிர்வையும்‌, வலியையும்‌ உண்டாக்குகிறது. ஏற்க முடியாத உங்கள்‌ இழப்பின்‌ துயரத்தில்‌, மறக்க முடியாத நினைவுகள்‌ அலை அலையாக உயிர்த்தெழுகின்றன.

நீங்கள்‌ எடுத்தப்‌ புகைப்படங்களில்தான்‌, 'சரவணன்‌ சூர்யாவாக:' மாறிய அந்த அற்புதத்‌ தருணம்‌ நிகழ்ந்தது. 'முன்பின்‌ அறிமுகமில்லாத ஒருவனை: சரியான கோணத்தில்‌ படம்பிடித்துவிட வேண்டுமென, இரண்டு மணிநேரம்‌ நீங்கள்‌ கொட்டிய உழைப்பை இப்போதும்‌ வியந்து பார்க்கிறேன்‌.

'மெட்ராஸ்‌ டாக்கீஸ்‌' அலுவலகத்தில்‌ அந்த இரண்டு மணிநேரம்‌, ஒரு போர்க்களத்‌தில்‌ நிற்பதைப்‌ போலவே உணர்ந்தேன்‌. நேருக்கு நேர்‌' திரைப்படத்துக்காக நீங்கள்‌ என்னை எடுத்த. அந்த 'ரஷ்யன்‌ ஆங்கிள்' புகைப்படம்தான்‌, இயக்குனர்‌ திரு. வசந்த்‌, தயாரிப்பாளர்‌ திரு. மணிரத்னம்‌ உள்ளிட்ட அனைவருக்கும்‌, என்மீது நம்பிக்கை வர முக்‌கிய காரணம்‌. புகைப்படத்தைவிட பத்தாயிரம்‌ மடங்கு பெரியதாக முகம்‌ தோன்றும்‌ வெள்ளித்‌திரையிலும்‌, நடிகனாக என்னை படம்பிடித்ததும்‌ நீங்கள்தான்‌.

முதன்முதல்‌ என்‌ மீது பட்ட வெளிச்சம்‌, உங்கள்‌ கேமராவில்‌ இருந்து வெளிப்பட்டது அதன்மூலம்தான்‌ என்‌ எதிர்காலம்‌ பிரகாசமானது. என்னுடைய திரையுலகப்‌ பயணத்தில்‌ உங்களின்‌ பங்களிப்பும்‌, வழிகாட்டலும்‌ மறக்கமுடியாதது. 'வளர்ச்‌சிக்கு நீ இதையெல்லாம்‌ மாற்றிக்கொள்ள வேண்டும்‌' என அன்புடன்‌ அக்கறையுடன்‌ சொன்ன வார்த்தைகள்‌ இப்போதும்‌ என்னை வழிநடத்துகின்றன.

இயக்குனராக 'அயன்‌' திரைப்படத்திற்கு நீங்கள்‌ உழைத்த உழைப்பு, ஒரு மாபெரும்‌ வெற்றிக்காக காத்திருந்த எனக்குள்‌, புதிய உத்வேகத்தை அளித்தது. அயன்‌ திரைப்படத்‌தின்‌ வெற்றி, 'அனைவருக்கும்‌ பிடித்த நட்சத்‌திரமாக: என்னை உயர்த்‌தியது என்பதை நன்றியுடன்‌ நினைத்துப்‌ பார்க்‌கிறேன்‌.

எனது முதல்‌ திரைப்படத்தில்‌ நீங்களும்‌, உங்களின்‌ கடைசி திரைப்படத்தில்‌ நானும்‌ பணியாற்றியது இயற்கை செய்த முரண்‌. எங்கள்‌ நினைவில்‌ என்றும்‌ நீங்கள்‌ வாழ்வீர்கள்‌ சார்‌. இதயப்பூர்வமான நன்றி அஞ்சலி.

நினைவுகளுடன் சூர்யா

இவ்வாறு சூர்யா அந்த இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

More News

'அஞ்சான்' படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தடுப்பூசி எங்கடா டேய்? நடிகர் சித்தார்த்தின் ஆவேச டுவிட்!

நடிகர் சித்தார்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநில முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்த நிலையில் சித்தார்த்துக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாக

பிரபல யூடியூபர்கள் ராம்-ஜானு திருமண நிச்சயதார்த்தம்: வைரல் வீடியோ

யூடியுப் மூலம் பிரபலமான ராம் மற்றும் ஜானு ஆகியோர் நீண்ட காலம் காதலித்து தற்போது தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ராம்-ஜானுவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில்

தமிழ் சினிமாவின் ஃபீனிக்ஸ் பறவை: தன்னம்பிக்கையால் உயர்ந்த தல அஜித்துக்கு வாழ்த்துக்கள்!

இன்று 50வது பிறந்த நாளை கொண்டாடும் தமிழ் சினிமாவின் ஃபீனிக்ஸ் பறவையான அஜித் இன்னும் பல ஆண்டுகள் தனது ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இல்லை… ஏன்?

இந்தியா முழுக்க கடந்த மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.