என்னை நானே புதுப்பித்து கொண்டேன்: தானா சேர்ந்த கூட்டம்' பட விழாவில் சூர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' நாளை உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் சிறப்பு விழா ஒன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சூர்யா, அனிருத், விக்னேஷ் சிவன் உள்பட படக்குழுவினர் அனனவரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சூர்யா, விக்னேஷ் சிவன், அனிருத் உள்பட படக்குழுவினர் பேசியதை தற்போது பார்க்கலாம்:
சூர்யா: 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனின் அணுகுமுறையால் நான் என்னை நானே புதுப்பித்து கொண்டதை போல் உணர்ந்தேன். இந்த படத்தில் நடித்ததன் மூலம் நான் பல விஷயங்களை புதியதாக கற்றுக்கொண்டேன். என்னுடைய படங்களில் 'தானா சேர்ந்த கூட்டம்' நிச்சயம் வேறுபட்ட படமாக இருக்கும்.
அனிருத்: முதன்முதலில் சூர்யா படத்திற்கு இசையமைத்துள்ளேன். சூர்யாவின் அற்புதமான நடிப்பை திரையில் பார்த்து உண்மையில் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். இந்த படத்தில் அவருடைய அனைத்து நுணுக்கங்களையும் நான் விரும்பி அனுபவித்தேன். என்னுடைய இசையில் உருவான பாடல்களில் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டுள்ள பாடல்களில் இந்த படத்தின் பாடல்களும் அடங்கும்
விக்னேஷ் சிவன்: காதல் மீது அப்படி ஒரு அட்டாச்மெண்ட்ல இருக்கிங்க போல என்று தொகுப்பாளினி அஞ்சனாவின் கேள்விக்கு பதலளித்த விக்னேஷ் சிவன், 'லவ் தான் எல்லாமே. அதுலதான் ஒரு உற்சாகம் உள்ளது என்றார். இவ்வாறு அவர் கூறியதும் அவருடைய நிஜ அனுபவத்தை கூறியதாகவே அனைவரும் கைதட்டினர்.
ரம்யாகிருஷ்ணன்: நான் இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ளேன் எனது கேரக்டரை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக அனுபவித்து நடித்தேன்
சுரேஷ்மேனன்: சூர்யாவுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் மறக்க முடியாதது. அவர் ஒரு சிறந்த தொழில்முறை மற்றும் ஜெண்டில்மேன் நடிகர்
ஆர்.ஜே.பாலாஜி: விக்னேஷ் சிவன் சரியாக படிக்காதவர், ஆனால் சரியான நேரம் வரும்போது ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கும் மாணவர். தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout