5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும்.. அண்ணா பல்கலையில் சூர்யா பேச்சு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ‘5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும்’ என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய (STEM) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பெண்கள் அதிகளவில் பங்குபெற வைக்க வேண்டும் என்பதை கருப்பொருளாகக் கொண்டு, அகரம் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பாக ‘EMPOW HER - 2024’ என்ற கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசிய போது ’பெண்களிடம் மிகப்பெரிய சக்தி உள்ளது, ஐந்து ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும் என்று தெரிவித்தார். நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் வைத்தாலும் அவரை அங்கு கொண்டு சேர்த்தது ஒரு பெண்தான், பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தது பெண் தான் என்று அவர் தெரிவித்தார்
அக்னி மிஸைல் முதல் இஸ்ரோ வரை பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்றும் என்னை சுற்றி இருக்கக்கூடிய பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்
பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களை விட 50 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டிய நிலை உள்ளது என்றும் தெரிவித்தார். பெண்களை இன்னும் மேலே கொண்டு வர நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம் என்றும் அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments