சூர்யா-சிவா படத்தின் சூப்பர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,August 12 2019]

நடிகர் சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதனை அடுத்து அவர் நடித்து வரும் 'சூரனை போற்று' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சுதா கொங்காரா இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 5.40 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்று இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளை அடுத்து இந்த படத்தின் குழுவினர் அறிவிக்க இருக்கும் இந்த முக்கிய அறிவிப்பு என்ன என்பதை அறிய சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.