சூப்பர் அப்டேட் கொடுத்த சூர்யாவின் 'கங்குவா' படக்குழு.. ஒரே ஃபயர் தான் போல..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில வாரங்களாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜூலை 23ஆம் தேதி சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாட இருப்பதை அடுத்து அன்றைய தினம் ‘கங்குவா’ படத்தின் அப்டேட் மற்றும் ’சூர்யா 44’ படத்தின் அப்டேட் வரும் என்றும் செய்திகள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஜூலை 23ஆம் தேதி ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ‘கங்குவா’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கம்போஸ் செய்த ஃபயர் பாடல் அன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ஃபயர் பாடல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில் 10 மொழிகளில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகியுள்ளது.
Ignite your spirits and ready yourselves for a blazing celebration 🎇#FireSong 🌋🔥 from #Kanguva is set to release on 23rd July#KanguvaFromOct10 🦅@Suriya_offl @DishPatani @thedeol @directorsiva @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe @vetrivisuals @supremesundar… pic.twitter.com/JTl9AdbzGO
— Studio Green (@StudioGreen2) July 18, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments