close
Choose your channels

'கங்குவா' இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி இதுவா? ரசிகர்கள் உற்சாகம்..!

Sunday, October 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், அடுத்த கட்டமாக இந்த படத்தின் விளம்பர பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இசை வெளியீட்டு விழா தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.

’கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, என்னும் ஓரிரு நாளில், வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த விழாவில், சூர்யாவின் பேச்சைக் கேட்க, அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’கங்குவா’ திரைப்படம், சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் உள்பட 10 மொழிகளில் திரையரங்குகளில், கூடுதலான முறைகளில் ஓடிடி தளங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து ரிலீசுக்கு முன் இன்னொரு டிரெய்லர் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment