'விக்ரம்' ரோலக்ஸ் கேரக்டரை அன்றே கணித்த சூர்யா!

  • IndiaGlitz, [Sunday,June 05 2022]

கமலஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் ரோலக்ஸ் என்ற அட்டகாசமான வில்லன் கேரக்டரில் சூர்யா தோன்றி இருப்பார் என்பதும் அந்த ஐந்து நிமிடங்களும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மாஸ் ஆக இருந்தது என்பதும் தெரிந்ததே.

அதுமட்டுமின்றி ’விக்ரம்’ அடுத்த பாகத்தில் கார்த்தியும் ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் ஒரு சில காட்சிகளில் கோடிட்டு காட்டி இருந்தார். இதனை அடுத்து ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் கார்த்தி ஹீரோவாகவும் சூர்யா வில்லனாகும், கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சூர்யாவிடம் இயக்குனர் லிங்குசாமி கேள்வி கேட்ட போது, நீங்களும் கார்த்தியும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால், அந்த படத்தில் யார் வில்லன்? யார் ஹீரோ? என்று கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சூர்யா ’நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன். வீட்டில் நான்தான் சைலன்ட் ஆன வில்லன். அவன் ரொம்ப நல்ல பையன். அப்பா பையன், அப்பாவுக்கு செல்ல பையன். அதேபோல் படத்தில் நான் சைலண்ட் ஆன வில்லனாகவும் கார்த்திக் பட்டையெல்லாம் போட்டுக்கொண்டு நல்ல பையனாக நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை’ என்று கூறினார்.

சூர்யா கூறியபடியே ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா வில்லனாகும், பட்டை போட்ட ‘கைதி’ டில்லியாக கார்த்தி நாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதால் இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.