ஒரு படத்தோட வசூல் எவ்வளவுங்கிற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம்.. சூர்யா அறிவுரை..
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள், ஒரு படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம் என்று நடிகர் சூர்யா, "மெய்யழகன்" படத்தின் விழாவில் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் தயாரிப்பில், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருப்பதை முன்னிட்டு, இதற்கான ப்ரோமோஷன் விழா நேற்று நடைபெற்றது.
அதில் சூர்யா பேசும் போது, "ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள். வணிக ரீதியாக எவ்வளவு வசூல் செய்தது, எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்ற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம். தயவுசெய்து அது உங்களுக்கு தேவையில்லை.
இந்த படத்தை கொண்டாடுவதற்காகவே நான் தயாராக இருப்போம். படத்தை மட்டும் பாருங்கள். விமர்சனத்தில் அதிக ஆர்வம் காட்ட வேண்டாம். இந்த மாதிரியான படங்கள் அபூர்வமாகவே கிடைக்கும். எனவே, வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் 'மெய்யழகன்' படத்தை பார்த்து ரசிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
சூர்யாவின் இந்த அறிவுரை குறித்த வீடியோ, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஒரு படம் வெளியான உடனேயே சினிமா டிராக்கரக்ள் முதல் நாள் எவ்வளவு வசூல், இரண்டாம் நாள் எவ்வளவு வசூல் என்பவற்றை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சமீபகாலமாக, இந்த தகவல்களை சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர்களே வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அந்த தொகை குறித்த நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
#Suriya’s much-needed advice to fans of all actors - ‘Watch a film as a film. Don’t look at its box office collections - that should not be your concern. And don’t review the films. Just enjoy the film.’
— Latha Srinivasan (@latasrinivasan) September 23, 2024
Thank you @Suriya_offl pic.twitter.com/7sKvj5VKi7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout