சட்டம் சுதந்திரத்தை காப்பதற்காகவே, குரல்வளையை நெறிக்க அல்ல: சூர்யா

  • IndiaGlitz, [Friday,July 02 2021]

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக... அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவு திருத்த மசோதா கடந்த் 2019ஆம் ஆண்டு மாநிலங்களவை அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின்னா் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு கடந்தாண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமா்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021-ஆம் ஆண்டில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும்,. அதுமட்டுமின்றி திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படும்.

இந்த ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இது ஜூலை 2(இன்று) வரை பொதுமக்களின் பார்வைக்காக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என சினிமா துறையை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா இதுகுறித்து கூறியதாவது: சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல...