'ஒன்றரை டன் வெயிட்டுடா'! சூர்யாவின் பதிலுக்கு சிஎஸ்கே கமெண்ட்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா இன்று டுவிட்டரில் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்
இந்த நிலையில் ரசிகர்களோடு ரசிகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் சிஎஸ்கே அணியில் சின்னத்தல' என்று அன்புடன் அழைக்கப்படுவருமான சுரேஷ் ரெய்னா, சூர்யாவிடம் ஒரு கேள்வியை கேட்டார். அந்த கேள்வி, 'சிஎஸ்கே' அணியில் உங்களுக்கு பிடித்தவர் யார்? என்பதுதான்
சிஎஸ்கே அணியில் பிடித்தவர் யார்? என்பதை ஒரு சிஎஸ்கே வீரரே கேட்டால் பதில் சொல்வது கொஞ்சம் தர்மசங்கடமாகத்தான் இருக்கும். ஆனால் சூர்யா சற்றும் யோசிக்காமல், நான் சொல்லும் பதிலை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். சிஎஸ்கே அணி என்றாலே எல்லோருக்கும் பிடித்தவர் தோனி தான். கடந்த சிஎஸ்கே போட்டியை ரசித்து பார்த்தேன். நான் என்றும் சிஎஸ்கே ரசிகன் என்று கூறினார்.
சூர்யாவின் இந்த பதிலை 'ஒன்றரை டன் வெயிட்டுடா' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் டுவிட்டர் பக்கம் கமெண்ட் அளித்துள்ளது.
Singham is 1.5 tonnes of #Yellove! #WhistlePodu ?????? https://t.co/nocRtDYyta
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments