கற்பனையை விட உண்மை சம்பவம் பிரமிக்க வைக்கும்: தீரன் படம் குறித்து சூர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் சதுரங்கவேட்டை இயக்குனர் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பிரிமியர் காட்சி நேற்று திரையிடப்பட்டது. நேற்று பிரிமியர் காட்சியில் படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை பாராட்டி விமர்சனம் செய்து வருகின்றனர். பாசிட்டிவ் விமர்சனத்தில் இருந்து இந்த படம் இன்று தொடங்குவதால் ரசிகர்களின் வரவேற்பை இந்த படம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து நடிகர் சூர்யா கூறியதாவது: தீரன் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை அதிகாரிகள் வாழ்நாளில் காணப்படும் வழக்குகளை வைத்து எடுக்கப்பட்ட படம். எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம் நம்மை பிரமிக்க வைக்கும்.
தமிழ் நாட்டில் 10வருடமாக கண்டு பிடிக்க முடியாத ஒரு வழக்கை இருபது காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை. இயக்குநர் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் சதுரங்க வேட்டையில் எப்படி பேசப்பட்டதோ அதே போல் இதிலும் பேசப்படும்.
ஜிப்ரானின் இசை அருமையாக உள்ளது. சத்யாவின் ஒளிப்பதிவு முழுமையாக பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மூலமாக அதிக விஷயங்கள் வெளியில் தெரிகிறது. ஒரு காவல் துறை அதிகாரி வாழ்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம். உண்மையான சம்பவத்தோடு சேர்த்து கமர்ஷியல் படம் எடுத்துள்ளார்கள்' என்று கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout