சூர்யா- ஆர்ஜே பாலாஜி படத்தின் நாயகி இவரா? என்ன டைட்டில் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,October 18 2024]

சூர்யா நடிப்பில் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், இந்த படத்தின் நாயகி மற்றும் டைட்டில் குறித்த தகவல் கசிந்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்த 'கங்குவா’ என்ற திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கின்ற நிலையில், தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமும் இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சூரியாவின் 45 ஆவது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், இந்த படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்க இருப்பதாகவும், ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது வந்துள்ள தகவலின் படி, இந்த படத்தின் நாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ’சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘அன்பறிவு’, ‘வரலாறு முக்கியம்’, ‘வசந்தமுல்லை’, ‘பரம்பொருள்’, ‘பிடி சார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்திற்கு ’ஹிண்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது

More News

பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. என்ட்ரி ஆன ஜீடிவி சீரியல்... இந்த வார டிஆர்பி ரேட்டிங்..!

தமிழ் சீரியல்களை பொருத்தவரை, சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு மட்டுமே போட்டியாக இருந்த நிலையில், தற்போது டாப் 10 இடத்தில் ஜீ டிவி சீரியலும் இணைந்துள்ளது. இதனால் போட்டி அதிகமாகி உள்ளது.

நடிகை தமன்னாவிடம் 5 மணி நேரம் விசாரணை செய்த அமலாக்கத்துறை.. என்ன காரணம்?

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை செய்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறி வச்சா இரை விழணும் .. 'வேட்டையன்' படத்தின் ஒரு வார வசூல் இத்தனை கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியான நிலையில், இந்த படத்தின் ஒரு வார வசூல் குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எதைக் கேட்டாலும் இல்லைங்கிற.. யாருடி நீ? கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா' டிரைலர்..!

கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த "ரிவால்வர் ரீட்டா" என்ற திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியான நிலையில், இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இன்று.. யார் கெத்து? நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்.. முட்டி மோதும் போட்டியாளர்கள்..

பிக் பாஸ் வீட்டில் யார் கெத்து என்ற நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் இன்று வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த டாஸ்கில் வெற்றி பெற போட்டியாளர்கள் முட்டி மோதி வரும் காட்சிகள்