'என்.ஜி.கே' விமர்சனங்கள் குறித்து சூர்யா கருத்து

  • IndiaGlitz, [Friday,June 07 2019]

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'என்.ஜி.கே' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் திருப்திகரமாக இருப்பதாகவே செய்திகள் வெளிவந்துள்ளது. இரண்டாவது வாரத்திலும் இந்த படத்திற்கு பார்வையாளர்கள் வந்து கொண்டிருப்பதே இதற்கு சாட்சி.

பொதுவாக செல்வராகவன் படங்களுக்கு ஆரம்பத்தில் சுமாரான விமர்சனங்களும் ஒருசில வருடங்கள் கழித்து நல்ல விமர்சனங்களும் வருவதுண்டு. இதற்கு உதாரணங்கள் 'புதுப்பேட்டை' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' அதேபோல் அரசியல் த்ரில் படமான 'என்.ஜி.கே' படமும் ஒருசில வருடங்கள் கழித்து போற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சில மறைமுக செய்திகளை செல்வராகவன் கூறியிருப்பது போகப்போகத்தான் பார்வையாளர்களுக்கு புரியும் என்ற விமர்சனங்களும் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா, 'என்.ஜி.கே' படம் குறித்து வெளிவந்துள்ள விமர்சனங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து விதமான விமர்சனங்களையும் தான் ஏற்று கொள்வதாகவும், மேலும் விமர்சனங்கள் செய்தவர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், ஒரு வித்தியாசமான முயற்சி செய்த தனக்கு பாராட்டுக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.
 

More News

ஜாக்கிசான் பாணியில் ஸ்டண்ட் காட்சிகள்: சந்தானத்தின் புதிய முயற்சி

நடிகர் சந்தானம் நடித்து வரும் 'டகால்டி' படத்தின் இரண்டு லுக் நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தில் சந்தானம்,

'தளபதி 64' படத்தின் டீம் குறித்த அசத்தலான தகவல்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

ஸ்பானிஷ் மொழி த்ரில்லர் படத்தின் ரீமேக்கில் பாகுபலி நடிகை?

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா, இந்த இரண்டு படங்களை அடுத்து 'பாகிமதி' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார்.

ஜீப்பில் பயணம் சிம்பு-ஹன்சிகா! மீண்டும் இணைகிறார்களா?

ஹன்சிகா நடித்து வரும் 50வது திரைப்படமான 'மஹா' படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் உதவி!

+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் எம்பிபிஎஸ் படிக்க முடியாத நிலையில் உள்ள பல மாணவ மாணவிகளில் ஒருவர் சஹானா.