அவரை மட்டும் புகைப்படம் எடுக்க வேண்டாம்.. பத்திரிகையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சூர்யா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா தனது மகனுடன் விமான நிலையத்துக்கு வந்த போது தனது மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம் என பத்திரிகையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில் பத்திரிகையாளர்களும் அந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
நடிகர் சூர்யா தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா சென்னையில் சிவகுமார் அறக்கட்டளை சார்பில் நடந்த கல்வி விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
இந்த விழாவை முடித்துவிட்டு அவர் மீண்டும் மும்பை திரும்பும் போது அவருடன் அவருடைய மகன் தேவ் உடன் இருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் சூர்யாவின் மகனை புகைப்படம் எடுக்க முயற்சித்த போது ’தயவுசெய்து அவரை மட்டும் புகைப்படம் எடுக்க வேண்டாம்’ என்று பத்திரிகையாளர்களிடம் அன்புடன் கேட்டுக் கொண்டார். இதனை எடுத்து பத்திரிகையாளர்களும் சூர்யாவை மட்டுமே புகைப்படம் எடுத்தனர். தனது மகள் மற்றும் மகன் புகைப்படம் பத்திரிகையில் வருவதை விரும்பவில்லை என்பதை அவர் ஏற்கனவே பல பேட்டிகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூர்யா தற்போது ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
’கங்குவா’ படத்தை முடித்தவுடன் அவர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படத்திலும் அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments