சூர்யா ரிலீஸ் செய்த டிரைலர்: 28ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இந்த வருடம் முழுவதுமே திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுவதால் தமிழ் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் வரும் 28ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த திரைப்படம் ஒன்றின் டிரெய்லரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டு உள்ளார்.
நடிகை ஸ்ரேயா ரெட்டி முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’அண்டாவ காணோம்’. இந்த திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டு கொண்டே இருந்தது.
இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி ஓடிடியில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். டிரைலர் வெளியிட்ட சூர்யாவுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் மற்றும் நாயகி ஸ்ரேயா ரெட்டி நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Here's the trailer of #AndavaKaanom exclusively releasing on @jskprime from Aug 28th. All the best team!https://t.co/9H8Wkv8a1l#AndavaKaanom @sriyareddy @jskfilmcorp @onlynikil
— Suriya Sivakumar (@Suriya_offl) August 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com