இந்த படத்தை எல்லோரும் குடும்பத்துடன் பாருங்கள்.. சூர்யா பரிந்துரைத்த இன்று ரிலீசான படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பாருங்கள் என்று நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பரிந்துரை செய்துள்ளார்.
கவின் நடித்த ’ஸ்டார்’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்கள் இன்று வெளியாகி உள்ள நிலையில் ஹிந்தியில் ஜோதிகா நடித்த ’ஸ்ரீகாந்த்’ என்ற படமும் இன்று வெளியாகி உள்ளது. ராஜ்குமார், ஜோதிகா உள்பட பலர் நடித்த இந்த படத்தை துஷார் ஹிரநந்தனி என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் முதற்கட்ட விமர்சனங்கள் பாசிட்டிவாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜோதிகா நடித்த ’ஸ்ரீகாந்த்’ திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ’ஸ்ரீகாந்த்’ திரைப்படம் ஒரு அழகான ரோலர் கோஸ்டர் படம், அது நம்மை சிரிக்கவும் வைக்கும். வாழ்க்கையில் ஒரு நபர் எப்படி பல விஷயங்களை சாதிக்க முடியும் என்பதை உணரவும் வைக்கும். ராஜ்குமார் ராவ் அவர்களின் நடிப்பு, துஷார் ஹிரநந்தனி இயக்கம் ஆகியவை சூப்பர். இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஜோதிகா நடிப்பு குறித்து கூறிய போது ’நீங்கள் தேர்வு செய்து நடிக்கும் கதைகள் எப்போதுமே சிறப்பு வாய்ந்தவையாக இருக்கும். உங்கள் நடிப்பு அதை உண்மை ஆக்குகிறது’ என்றும் கூறியுள்ளார். மேலும் ’இது ஒரு முக்கியமான படம் என்றும் அனைவரும் குழந்தைகளுடன் சென்று திரையரங்குகளில் பாருங்கள்’ என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளார். சூர்யாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
.#Srikanth the film is a beautiful rollercoaster ride that’ll make us laugh cry & realise how one person can achieve so many things in life! #Respect @RajkummarRao for his sincere efforts & #TusharHiranandani, Nidi & @Tseries congrats! & #Jyotika the kind of stories you’re part… pic.twitter.com/zz2HPh4gw3
— Suriya Sivakumar (@Suriya_offl) May 10, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments