close
Choose your channels

'வாடிவாசல்' படத்தில் இருந்து விலகிவிட்டாரா சூர்யா? அப்ப இவர் தான் நாயகனா?

Saturday, February 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான போதிலும் இந்த படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பு மட்டுமே நடந்த நிலையில் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இயக்குனர் வெற்றி மாறன் ’விடுதலை 2’ படத்தை முடித்துவிட்டு ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக தனுஷ் இணைவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ’வாடிவாசல்’ படத்தில் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அமீருடன் சூர்யா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அமீருடன் நடிப்பதில் சூர்யாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அவரது தரப்பில் கூறப்பட்ட நிலையில் தற்போது வெற்றிமாறன் ’விடுதலை 2’ படத்தை முடித்துவிட்டு விஜய்யின் ‘தளபதி 69’ படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதால் சூர்யா திடீரென இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

இயக்குனர் வெற்றிமாறனுக்கு விஜய் படத்தின் வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு தனுஷை வைத்து ’வாடிவாசல்’ படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment