சமந்தா படத்தை புரமோஷன் செய்யும் சூர்யா: படக்குழுவினர் மாஸ் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமந்தா நடித்துள்ள அடுத்த திரைப்படத்தை நடிகர் சூர்யா புரமோஷன் செய்யும் தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ‘யசோதா’ என்பதும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
இந்த நிலையில் ‘யசோதா’ படத்தின் டிரைலர் நாளை அதாவது அக்டோபர் 27ஆம் தேதி மாலை 5.36 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சமந்தாவின் படத்தை நடிகர் சூர்யா புரமோஷன் செய்வதை அடுத்து சூர்யாவுக்கு சமந்தாவின் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யா மற்றும் சமந்தா இருவரும் ’அஞ்சான்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது தெரிந்தது.
சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி சர்மா, சம்பத்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹரி - ஹரிஸ் இயக்கத்தில் மணிசர்மா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
Thankyou so so much @Suriya_offl ??☺️#YashodaTrailer
— Samantha (@Samanthaprabhu2) October 26, 2022
Trailer on 27th Oct @ 5.36 PM☺️ https://t.co/to4jWKrvnv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments