சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று இன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
மேலும் இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சூர்யாவின் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஜாலியான காட்சிகளும் உள்ளதை அடுத்து இந்த படம் அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையிலான படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது
சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.
#EtharkkumThunindhavan is releasing on Feb 4th, 2022!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop #SaranyaPonvannan #MSBhaskar @priyankaamohan #Vinay @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO #ETOnFeb4th pic.twitter.com/hwuwEkX3Bm
— Sun Pictures (@sunpictures) November 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments