சுரேஷ் ரெய்னா வீட்டில் நடந்த சோகம்: நடிகர் சூர்யாவின் ஆறுதல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையிலிருந்து ஐபிஎல் போட்டியில் விளையாட துபாய் சென்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா வீட்டில் நடந்த ஒரு சோகம் காரணமாக அவர் துபாயிலிருந்து நாடு திரும்பினார்.
சுரேஷ் ரெய்னாவின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து அவரது உறவினர்களை சரமாரியாக தாக்குதல் நடத்தியதில், சுரேஷ் ரெய்னாவின் மாமா பலியாகிவிட்டதாகவும் அவருடைய இன்னொரு உறவினர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் நேற்று இரவு அவரும் இறந்ததாகவும் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் கடுமையான காயங்களால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுரேஷ் ரெய்னா இன்று காலை தனது டுவிட்டரில் பதிவு செய்து, பஞ்சாப் போலீசார் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒரு குற்றம் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து சுரேஷ் ரெய்னாவுக்கு பல்வேறு தரப்பினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் சற்று முன் நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்த கஷ்டமான காலத்தில் சுரேஷ் ரெய்னாவுக்கு ஆறுதலாக தோள் கொடுத்து நிற்கிறோம் என்றும், மேலும் இரக்கமற்ற அந்த குற்றவாளிகள் உடனடியாக கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் சூர்யா கூறியுள்ளார் மேலும் சுரேஷ் ரெய்னாவின் மன அமைதிக்கும் அவரது குடும்பத்தினரின் மன அமைதிக்கும் தான் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
My deepest condolences dear @ImRaina we all shoulder your grief! Let the heartless criminals be summoned to justice!! @CMOPb @capt_amarinder @PunjabPoliceInd My prayers for strength and peace. https://t.co/y3SeQJpMEO
— Suriya Sivakumar (@Suriya_offl) September 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com