40 நாட்களில் ஒரு படம்.. சூர்யாவின் அதிரடி முடிவு.. இயக்குனர் இவர் தான்..!

  • IndiaGlitz, [Wednesday,December 11 2024]

40 நாட்களில் சூர்யா ஒரு படத்தில் நடித்து முடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கான இயக்குரையும் அவர் தேர்வு செய்து விட்டதாகவும் கூறப்படுவது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூர்யா 44’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 45’ படத்தில் அவர் நடித்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக அவர் பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

‘பீஷ்மா பருவம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அமல் நீரத் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடித்து விட்டதாகவும், இந்த படத்தை மொத்தமாகவே முடிக்க 40 நாட்கள் போதும் என்று இயக்குனர் கூறியதை அடுத்து சூர்யா இந்த படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, ஆர்.ஜே. பாலாஜி படத்தை முடித்தவுடன் அமல் நீரத் படத்தில் சூர்யா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

வெற்றிமாறன் கதை.. கௌதம் மேனன் இயக்குனர்.. ஹீரோ யார் தெரியுமா?

வெற்றிமாறன் கதையை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தில் ஒரு மாஸ் நடிகர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

ஏஆர் ரஹ்மான் வெளியே.. விஜய் சேதுபதி உள்ளே.. சூர்யா அடுத்த படத்தின் மாஸ் தகவல்..!

சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் விலகியதை தொடர்ந்து சாய் அபிநயங்கர் என்ற இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டார்

தனுஷின் கனவு திரைப்படம் டிராப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி..!

தனுஷ் நடிக்க இருந்த அவரது கனவு திரைப்படம் டிராப் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் ஒரு ரசிகர் மரணம்.. 'புஷ்பா 2' படத்திற்கு என்ன ஆச்சு?

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் ரிலீஸ் ஆன அன்று கூட்ட நெரிசல் காரணமாக பெண் ஒருவர் பலியான நிலையில், நேற்று திரையரங்கில் இந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்த

இன்னொரு படத்திற்கும் வாய்ப்பு.. 'சூர்யா 45' இசையமைப்பாளருக்கு குவியும் படங்கள்..!

சமீபத்தில் சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தின் இசையமைப்பாளராக அபிநயங்கர் என்பவர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு இன்னொரு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.