close
Choose your channels

பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் சூர்யாவின் அடுத்த படம்.. இதுதான் ரிலீஸ் தேதியா?

Friday, July 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ’சூரரை போற்று’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

அதுமட்டுமின்றி இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் என 5 தேசிய விருதுகளை பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்தது.

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது சுதா கொங்காரா இந்தியில் இயக்கி வருகிறார் என்பதும் சூர்யா நடித்த வேடத்தில் அக்சய்குமார் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இந்த படத்தை தயாரித்த சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் ஹிந்தியிலும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் சூர்யா ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment