பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் சூர்யாவின் அடுத்த படம்.. இதுதான் ரிலீஸ் தேதியா?

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ’சூரரை போற்று’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

அதுமட்டுமின்றி இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் என 5 தேசிய விருதுகளை பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்தது.

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது சுதா கொங்காரா இந்தியில் இயக்கி வருகிறார் என்பதும் சூர்யா நடித்த வேடத்தில் அக்சய்குமார் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இந்த படத்தை தயாரித்த சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் ஹிந்தியிலும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் சூர்யா ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

'குக் வித் கோமாளி' வைல்ட் கார்ட் போட்டியில் வெற்றி பெற்றது இவரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடியப்போகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 புரமோ ஷூட்டிங் முடிந்து விட்டதா? எப்போது தொடங்குகிறது?

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 7வது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான் அவரை பலமுறை சந்தித்து இருக்கிறேன்: தற்கொலை செய்த காவல்துறை அதிகாரி குறித்து விஷால்..!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் என்பவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மறைவு குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் ஷாட் நாயகன் எம்.எஸ்.தோனியின் 10 பிரமிக்க வைக்கும் சாதனைகள்!

இந்தியக் கிரிக்கெட்டியில் பிரமிக்க வைக்கும் பல சாதனைகளை செய்து ரசிகர்கள் மனதைக் கொள்ளைக் கொண்டிருப்பவர் மகேந்திர சிங் தோனி. அவருடைய 42 ஆவது பிறந்த நாளை அவர் கொண்டாடி வரும் நிலையில்

பிக்பாஸ் லாஸ்லியாவா இவர்? வெறித்தனமாக வொர்க்-அவுட் புகைப்படங்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்களை