ஜூலையில் வெளியாகிறது சூர்யாவின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..! செம்ம போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரைபோற்று’ படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சூர்யா கேரக்டரில் அக்ஷய்குமார் நடித்திருக்கும் நிலையில் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ’சர்ஃபிரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அட்டகாசமான போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A common man's uncommon dream to make every Indian fly!✈️
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) June 14, 2024
Watch this Sarfira follow his crazy dream! #Sarfira only in cinemas on 12th July, 2024.@akshaykumar #RadhikkaMadan @SirPareshRawal @Sudha_Kongara #Jyotika @Suriya_offl @vikramix@rajsekarpandian @vbfilmwala… pic.twitter.com/8KJHnZjHUG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments