ஜூலையில் வெளியாகிறது சூர்யாவின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..! செம்ம போஸ்டர்..!

  • IndiaGlitz, [Friday,June 14 2024]

சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரைபோற்று’ படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சூர்யா கேரக்டரில் அக்ஷய்குமார் நடித்திருக்கும் நிலையில் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’சர்ஃபிரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அட்டகாசமான போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஹாலிவுட்டுக்கு போ நண்பா... விஜய் அட்மினுக்கு வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்..!

தளபதி விஜய்க்கு மிகவும் நெருக்கமான ஜெகதீஷ் அவர்களை 'ஹாலிவுட் போ நண்பா' என நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராபிக்ஸ் காட்சியிலும் காப்பியா? 'கல்கி 2898 ஏடி' படக்குழுவினர் மீது ஹாலிவுட் கலைஞர் குற்றச்சாட்டு..!

பொதுவாக திரைப்படங்களில் கதை திருட்டு, காட்சிகள் திருட்டு என்பதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் 'கல்கி 2898 ஏடி'திரைப்படத்தில் கிராபிக்ஸ் காட்சியை காப்பியடித்து

இவருக்கு பதில் இவர்.. 'பொன்னி' சீரியலில் இருந்து விலகிய நடிகைக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான 'பொன்னி' சீரியலில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த அர்ச்சனா கல்பாத்தி.. விஜய் ரசிகர்கள் குஷி..!

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

நிதி ஜோதிடத்தின் அற்புத ரகசியங்கள் - பணக்காரர் ஆகும் வழி!

பணம் சம்பாதிப்பது எப்படி என்பது தற்போதைய சூழலில் பெரும்பாலானோருக்கு இருக்கும் கவலை. இந்த கவலையை போக்கி, பொருளாதார செழிப்பை அடைய ஜோதிடம் எப்படி உதவும் என்பது குறித்து,