'கங்குவா'வுக்கு முன்னர் ரிலீஸ் ஆகும் சூர்யா படம்.. சூப்பர் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,February 13 2024]

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்பட்டாலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கங்குவா’ படத்திற்கு முன்பே சூர்யா நடிக்கும் இன்னொரு படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூர்யா நடித்த ’சூரரை போற்று’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்காரா இந்தியில் இயக்கி வரும் நிலையில் சூர்யாவின் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ’ஸ்டார்ட் அப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் அக்ஷய்குமார் சூர்யாவும் இணைந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’ஸ்டார்ட் அப்’ திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக தெரிகிறது. ரிலீஸ் செய்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த படம் தமிழைப் போலவே இந்தியிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.