சூர்யாவின் அடுத்த இந்திப்படம்.. மகாபாரத கேரக்டர், 2 பாகங்கள்.. இன்னும் ஆச்சரிய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏற்கனவே ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவான ’ரத்த சரித்திரா’ என்ற இந்தி திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஹிந்தி திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் மகாபாரதத்தில் உள்ள கேரக்டரை வடிவமைத்து உருவாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்றும் அதன் பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சூர்யா பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மவுரியா என்பவரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் மகாபாரதத்தில் உள்ள கர்ணன் கேரக்டரை மையமாக வைத்து படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சிவாஜி கணேசன் நடிப்பில் ’கர்ணன்’ என்ற திரைப்படம் உருவாகியிருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரமாண்டமாகவும் இரண்டு பாகங்களாகவும் இந்த படத்தை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த சரித்திர கதையம்சம் கொண்ட படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments