சூர்யாவின் அடுத்த படம் இரண்டு பாகமா? வைரலாகும் தகவல்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

நடிகர் சூர்யாவின் அடுத்த படம் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கங்குவா’. 38 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 3டி டெக்னாலஜியில் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் வரலாற்று கால பகுதிகள் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்கப்படாத அளவுக்கு இருக்கும் என்றும் அதேபோல் சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி 70% படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் மீதமுள்ள 30% படப்பிடிப்புகள் வரும் டிசம்பருக்குள் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் இரண்டாம் பாகத்துக்கு ஏற்றவாறு முடிக்கப்பட்டுள்ளது என்றும், எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மொத்தத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ’கங்குவா’ திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

More News

'ஆப்பிரிக்கா காட்டுப்புலி': 'ஆளவந்தான்' படத்தின் இன்னொரு மாஸ் பாடல் ரிலீஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில்

என் படத்தை பீரிசரில் வைத்து உயிரோடு அஞ்சலி செய்துவிட்டார்கள்: அறிமுக இயக்குனர் ஆதங்கம்..!

நான் இயக்கிய திரைப்படத்தை பிரீசரில் வைத்து உயிரோடு   ஆணி அடித்து அஞ்சலி செய்து விட்டார்கள் என அறிமுக இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

விஷ்ணுவுக்கு குப்பைத்தொட்டியை தூக்கி காட்டிய அர்ச்சனா.. ஏளனமாக பார்த்து ரசிக்கும் மாயா..!

விஷ்ணு மற்றும் அர்ச்சனா இன்று காலை முதல் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் குப்பைத்தொட்டியை எடுத்து விஷ்ணுவின் முகத்தில் அர்ச்சனா காட்டிய போது,

போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது:  அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய சசிகுமார்

'பருத்திவீரன்' பிரச்சனை குறித்து வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜாவின் அறிக்கையோடு இந்த பிரச்சனையை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சசிகுமார் வெளியிட்டுள்ள

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் மாற்றப்பட்டாரா? உண்மை நிலை என்ன?

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும்  'விடாமுயற்சி' என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவரு