close
Choose your channels

திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமான சூர்யா பட நடிகை: ரசிகர்கள் வாழ்த்து!

Saturday, December 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த 'காப்பான்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பரத் நடித்த ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன்பிறகு இவர் ’துரோகி’ ’தகராறு’ உள்பட பல படங்களில் நடித்தார் என்பதும், சூர்யா நடித்த ’காப்பான்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பூர்ணா கடந்த அக்டோபர் மாதம் துபாய் தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’நான் தாயாகப் போகிறேன் என்றும் என்னுடைய அம்மா அப்பா இருவரும் தாத்தா-பாட்டி ஆக போகிறார்கள் என்று நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நடிகை பூர்ணாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment