எனது உயிருக்கு ஆபத்து: நடிகை போலீஸ் புகார்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கலையரசன் மனைவியாக நடித்தவர் மீரா மிதுன். இவர் தமிழ் பெண்களுக்காக ஒரு அழகி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த போட்டி வரும் ஜூன் 3ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த அழகிப்போட்டியை தடுத்து நிறுத்த சிலர் திட்டமிட்டு தனக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துவருவதாக சென்னை காவல்துறையினர்களிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு செளத் பட்டம் வென்ற மீரா மிதுன் காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
மே 3-ம் தேதி மிஸ் தமிழ்நாடு டீவா 2019 என்ற நிகழ்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தேன். இதைத் தடுக்கும் வகையில் அஜீத் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன், மலர்கொடி ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள். எனது செல்போன் மற்றும் சமூகவலைதளத்தை முடக்கி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதில் அஜித் ரவி என்பவர் ஏற்கெனவே என்னுடைய அழகிப் போட்டி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர்கள் சில காவல்துறை அதிகாரிகளை வைத்தும் மிரட்டி வருகின்றனர். சம்மன் இல்லாமல் காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைக்கின்றனர். அந்த மிரட்டல் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.
அழகிப் போட்டிகளில் பெரும்பாலும் தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. நான் நடத்தும் மிஸ் தமிழ்நாடு டீவா 2019 அழகிப் போட்டி தமிழ்ப் பெண்களுக்காகத்தான். இந்தப் போட்டியை நான் நடத்திவிடக்கூடாது என்ற தொழில் போட்டி காரணமாக அஜித் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன் ஆகியோர் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், வரும் 3-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் 14 பெண்களையும் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன் 3-ம் தேதி வடபழனி நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ள அழகி போட்டிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்”.
இவ்வாறு நடிகை மீரா மிதுன் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com