திருமணமான 2 மாதத்தில் கர்ப்பம்.. சூர்யா பட நடிகையின் வளைகாப்பு புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா படத்தில் நடித்த நடிகைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணமான நிலையில் இரண்டே மாதத்தில் கர்ப்பமானார். இந்த நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி தற்போது நடந்துள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
பரத் நடித்த ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன் பிறகு அவர் ’தகராறு’ உள்பட பல படங்களில் நடித்தார் என்பதும் சூர்யா நடித்த ’காப்பான்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாய் தொழிலாளர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட பூர்ணா, கடந்த டிசம்பர் மாதம் கர்ப்பம் ஆனதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். ’நான் தாயாக போகிறேன் என்றும் தன்னுடைய அப்பா அம்மா இருவரும் தாத்தா பாட்டி ஆகப் போகிறார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments