மாஸ் லுக்கில் சூர்யா: 'சூர்யா 41' படத்தின் வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யாவின் 41வது திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார் என்பதும் கன்னியாகுமரி அருகே இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கேரவனில் இருந்து இறங்கிய சூர்யா ரசிகர்களுக்கு கைகாட்டி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.
ஷார்ட்ஸ் மற்றும் டீசர்ட் அணிந்துள்ள சூர்யாவின் மாஸ் கெட்டப் இந்த வீடியோவின் மூலம் தெரிய வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சூர்யா இந்த படத்தில் மீனவர் கேரக்டரில் நடித்து வருவதாகவும் மீனவர்கள் பிரச்சனையை சம்பந்தமாக கொண்டதுதான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், சூர்யாவின் தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜூவும் இந்த படத்தில் நடித்து வருவதாகவும், இருவருக்குமே இந்த படத்தில் சம அளவில் முக்கியத்துவம் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படம் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
Fans & Public at #Suriya41 Shooting Spot ?? @Suriya_offl #EtharkkumThunindhavan #VaadiVaasal pic.twitter.com/G1qduxZ9P0
— ?? SURIYA the BOSS ™ ?? (@Suriya_the_Boss) April 4, 2022
• @Suriya_offl #Suriya41 ?? ????Today shooting Spot pic.twitter.com/dMsfe9CH9V
— ?????????? ?????? / ᴋᴀɴʏᴀᴋᴜᴍᴀʀɪ (@rahulrajsfc) April 3, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments