ஒரே படத்தில் சூர்யா, மகேஷ்பாபு, அமிதாப், துல்கர் சல்மான்? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ஒரே திரைப்படத்தில் சூர்யா, மகேஷ்பாபு, அமிதாப்பச்சன், மற்றும் துல்கர் சல்மான் ஆகிய நால்வரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கவிருக்கும் அடுத்த படம் ’புராஜக்ட் கே’. இந்த படத்தை ’நடிகர் திலகம்’ என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது.

பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படம் தமிழ் உள்பட வேறு சில மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு சில பிரபல நட்சத்திரங்களை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சூர்யா, மகேஷ்பாபு, துல்கர் சல்மான் ஆகிய மூவரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் என்றும் கூறப்படுகிறது.