19 வயது பெண்ணிடம் மயங்கிய சூர்யகுமார் யாதவ்: காதல் தோன்றியது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு நாட்களாக சூர்யகுமார் யாதவ் குறித்த செய்திகள்தான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. நேற்று முன்தினம் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் நடித்த 43 பந்துகளில் 79 ரன்கள் தான் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதனை அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சூரியகுமாரின் அதிரடி ஆட்டம் காரணமாக அவர் இந்திய அணியில் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது
இந்த நிலையில் சூரியகுமாரின் காதல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. சூர்யகுமார் யாதவ் 22 வயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 19 வயது தேவிஷா என்ற பெண்ணை முதல்முறையாக பார்த்தார். பள்ளிக் கல்வியை முடித்து விட்டு அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்த தேவிஷாவை பார்த்தவுடன் சூரியகுமாருக்கு காதல் வந்துவிட்டது.
கல்லுரியில் பார்ப்பதற்கு முன்னர் தேவிஷாவை சூர்யகுமார் யாதவ் ஒரு நடன நிகழ்ச்சியில் தான் முதல்முறையாக பார்த்தார். தேவஷாவின் நடனத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த சூரியகுமார் அதன்பின் தான் படிக்கும் கல்லூரியில் தான் தேவிஷாவும் படித்து வருகிறார் என்பதும், அதுமட்டுமின்றி அப்போது மும்பை அணிக்காக விளையாடி கொண்டிருந்த தன்னுடைய பேட்டிங்கையும் தேவிஷா ரசித்து வருகிறார் என்பதும் அவருக்கு தெரிய வந்தது
அதன்பின் இருவரும் நட்பாக பழகி தொடங்கி, நட்பு சில மாதங்களில் காதலாகி, ஐந்து ஆண்டுகள் கழித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது சூர்யாகுமார் யாதவ்வின் பேட்டிங் மட்டுமின்றி காதல் திருமணம் குறித்த செய்தியும் வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com