close
Choose your channels

கத்தி பேசுறது, கத்தியை காட்டி பேசுறது எல்லாம் விருமனுக்கு பிடிக்காது: 'விருமன்' டிரைலர்

Thursday, August 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘விருமன்’ திரைப்படம் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் இந்த ட்ரெய்லரின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த டிரைலரில் முத்தையாவின் கிராமத்துக் காட்சிகள் மற்றும் இயல்பான வசனங்கள் ரசிக்கும் வகையில் உள்ளது. கார்த்தியின் அதிரடி ஆக்சன் நடிப்பு, பிரகாஷ்ராஜின் வில்லத்தனமான நடிப்பு, அறிமுக நடிகையா? என நம்பவே முடியாத அளவிற்கு அதிதிஷங்கரின் அசத்தலான நடிப்பு ஆகியவை சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ‘விருமன்’ திரைப்படம் ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய திரைப்படமாக இருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘விருமன்’ டீசரில் உள்ள இயக்குனர் முத்தையாவின் அதிரடி வசனங்கள் சில...

நாலு திசைக்கு வெளிச்சம் கொடுக்குற சூரியன் மாதிரி தான் நீ இருக்கணும்

நாலு புள்ள பெத்தேன், அதில் நாலாவது புள்ள நரகாசுரனா வந்து நிக்குது

கத்தி பேசுறது, கத்தியை காட்டி பேசுறது எல்லாம் விருமனுக்கு பிடிக்காது

என் புள்ளைய பாசத்தை காட்டி எவனும் அடிச்சிடலாம், ஆனால் பயமுறுத்தி எவனும் கிட்டகூட நெருங்க முடியாது

அக்கப்போர் பிடிச்ச நாயி, வைக்கப்போர்ல உட்கார்ந்துகிட்டு தானும் திங்காதாம், திங்கிற மாட்டையும் திங்க விடாதாம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment