விவேக் மறைவு: சூர்யா, ஜோதிகா, கார்த்தி நேரில் அஞ்சலி!

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் மறைவால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது என்பதும், அவருக்காக சமூக வலைதளங்கள் மூலம் கண்ணீர் அஞ்சலியை திரையுலக பிரபலங்கள் செலுத்தி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். திரையுலகினர் மட்டுமின்றி அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் விவேக்கின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோர் விவேக்கின் வீட்டிற்கு நேரடியாக சென்று மலர் அஞ்சலி செலுத்தி மரியதை செலுத்தினார்கள். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா மற்றும் விவேக் ஆகியோர் நேருக்கு நேர், பேரழகன், மாற்றான், சிங்கம், சிங்கம் 2 உள்பட ஒருசில படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இன்னும் பல திரையுலக பிரபலங்கள் விவேக்கின் வீட்டிற்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

தமிழ் சினிமாவில் 25 வருடம் கோலோச்சிய சின்னக் கலைவாணர் விவேக்… சாதித்தது என்ன?

தன்னுடைய காமெடியால் போகிறப் போக்கில் சமூகக் கருத்துக்களை அள்ளித் தெளிவித்து விட்டுச் செல்ல கூடியவர் நடிகர் விவேக்.

விவேக் இறப்பிற்கு மருத்துவர்கள் தெரிவித்த காரணம்!

சின்ன கலைவாணர் என திரையுலகினர்கள், ரசிகர்களால் போற்றப்படும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை உயிரிழந்தது திரையுலக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் கோலிவுட் பிரபலங்கள்

பிரபல காமெடி நடிகர் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென அவர் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 

மாரடைப்பால் சிகிச்சை பெற்ற நடிகர் விவேக் காலமானார்: கோலிவுட் அதிர்ச்சி

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

ஏரியில் கொட்டப்படும் தக்காளிகள்....! விவசாயிகள் பெரும் வேதனை...!

தக்காளியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், அதை பறித்து ஏரியில் கொட்டி வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள்.