இயக்குனரான சூர்யா மகள்.. முதல் படத்திற்கு கிடைத்த விருது: ஜோதிகா பெருமிதம்..!

  • IndiaGlitz, [Thursday,October 03 2024]

நடிகர் சூர்யாவின் மகள் தியா ஆவணப்படம் ஒன்றை இயக்கிய நிலையில், அந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகை ஜோதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, மகளால் பெருமை அடைவதாக பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர ஜோடிகள் சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகள் தியா, பள்ளியில் எடுத்த ஆவணப்படம் லீடிங் லைட். இந்த ஆவணப்படம் தற்போது விருதை பெற்றுள்ளது. இந்த ஆவணப்படத்திற்கு சிறந்த திரைக்கதை எழுத்தாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை நடிகை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, சினிமா துறையில் ஒளிப்பதிவு பணிகளில் ஈடுபடும் பெண்களின் வாழ்வை பற்றிய ஆவணப்படம் எடுத்து பெருமை அளித்துள்ள தியாவை புகழ்கிறேன். இத்தகைய செயற்பாடுகளை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தனது மகளின் ஆவணப்படத்தின் லிங்கையும் இணைத்து பதிவிட்டுள்ள நிலையில், இந்த ஆவணப்படம் ஏராளமானோர் பார்வைக்கு சென்றுள்ளது.

ஏற்கனவே, விஜய்யின் மகன் இயக்குநராக இருக்கும் நிலையில், சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகளும் வருங்காலத்தில் இயக்குநராக வர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. .

More News

நயன்தாராவின் அடுத்த படம் நேரடி ஓடிடி ரிலீஸா? என்ன காரணம்?

நடிகை நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா விவகாரம்: முன்னாள் மருமகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நாகார்ஜுனா

நடிகை சமந்தா குறித்து தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அதற்கு நாகார்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமந்தா விவாகரத்து விவகாரம்: முன்னாள் அமைச்சர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்..!

நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், முன்னாள் அமைச்சர் கேடி ராமராவ்

உங்கள் அரசியல் சண்டையில் என்னை இழுக்க வேண்டாம்: அமைச்சருக்கு நடிகை சமந்தா பதிலடி..!

தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா என்பவர் நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

குற்றங்கள் புற்றுநோய் மாதிரி, அதை வளரவிடக்கூடாது: 'வேட்டையன்' டிரைலர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் இரண்டரை நிமிடங்களுக்கும் மேலான ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.